‘The Legend’ to release worldwide on July 28
லெஜண்ட் சரவணன் நடிக்கும் தி லெஜண்ட்'
உலகெங்கும் ஜூலை 28 அன்று வெளியாகிறது'
உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்துள்ள லெஜண்ட் சரவணன்
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்துள்ளனர். 'தி லெஜண்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
'தி லெஜண்ட்’ படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கி உள்ளார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார்.
உலகெங்கும் ஜூலை 28 அன்று வெளியாகும் 'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றுள்ளார். தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிடுகிறார்.
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒர...