
Prime Video Screens an Exclusive Showcase of Upcoming Amazon Original Series, Vadhandhi – The Fable of Velonie, a Tamil Crime Thriller, at the 53rd International Film Festival of India (IFFI)
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் பிரத்யேக காட்சி
கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி 'தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர்- காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த தொடரில் எஸ்.ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்க...