‘Vangala Viriguda – Kurunila Mannan’ Music and Trailer Launch Event
'வங்காள விரிகுடா - குறுநில மன்னன்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
21 கிராப்ட்களை கையாண்டு இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ள குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'.
நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்...