
Work on Dhoni Entertainment’s first film ‘L.G.M’ begins with puja!
தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் )படத்தின் தொடக்க விழா
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார்.
அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியி...