ஒரு பிரச்சினையில் சிக்கிய நாயகன்.. மற்றொரு பிரச்சினையில் சிக்கிய நாயகி.. இருவரும் வேறொரு பிரச்சினையால் இணைந்து சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்ல அவர்களின் வாழ்க்கை எப்படி டேக் டைவர்ஷன் ஆகிறது என்பதே இந்த படம். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் டேக் டைவர்ஷன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில். இதில் சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ராம்ஸ், விஜய்டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜோஸ் பிராங்க்ளின், ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி,பாடல்கள்-மோகன் ராஜன், பிஆர்ஒ-சக்தி சரவணன்.
நாயகன் சிவகுமாருக்கு 5 வருடங்களாக பெண் தேடும் படலம் நடக்கிறது. பெண்ணோட கண் பெருசா இருக்கு.. மூக்கு ஷார்ப்பா இருக்கு என பல பெண்களை தவிர்த்து வருகிறார்.
இதனால் நாயகனுக்கு திருமணம் ஆகாமலே வருடங்கள் ஓடுகிறது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் முதலில் பார்த்த கண் பெருசா இருக்கிற காயத்ரி திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.
பாண்டிச்சேரியில் இவரின் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெறவுள்ள நிலையில் புறப்பட ரெடியாகிறார் சிவகுமார்.
அப்போது இவரின் ஆபிஸ் மனேஜர் ஜான் விஜய் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். ஒரு பெண்ணை கூட்டி வந்து தன் ஆசைக்கு இணங்க ஒப்படைக்க சொல்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் வேலை இருக்காது என மிரட்டுகிறார்.
ஆனால் அந்த பெண்ணோ (பாடினி குமார்) தாதா ராம்ஸிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். 8 லட்சம் கொடுத்தால் அந்த பெண்ணை விட்டு விடுகிறேன் என்கிறார் ராம்ஸ். ராம்சை ஏமாற்றி பாடினியை காரில் ஏற்றி சிவக்குமார் பாண்டிச்சேரி பயணிக்கிறார். அதே வழியில் பாடினியை காதலிக்கும் மற்றொரு இளைஞனும் சிவகுமாரின் வருங்கால மனைவியான காயத்ரியும் காரில் அழைத்துச் செல்லும் சூழல் ஏற்படுகிறது.
பின்னர் என்ன ஆனது? காயத்ரி? பாடினி? யாரை திருமணம் செய்தார் சிவகுமார்? என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக சிவகுமார் நடித்துள்ளார். காரில் செல்லும்போதே சின்ன சின்ன பாவனைகளில் நம்மை ஈர்க்கிறார் பாடினிகுமார். ஒரே உடையில் வந்தாலும் ரசிக்கலாம். நாயகி காயத்ரியின் கண்களும் பெரிதாக உள்ளது. இதனால் நாயகியை தேடலில் கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. வில்லனாக ஜான் விஜய், 70 கிட்ஸ் காதல் தாதாவாக ராம்ஸ் நடித்துள்ளனர்.
இவர்களுடன் விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் மற்றவர்களும் படத்தில் உண்டு.
ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா, வித்தியாசமாக ஒரு நாளில் நடக்கும் கதையாக படத்தை இயக்கியுள்ளார் சிவானி செந்தில்.