ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்” தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!!
முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஒரு neo-noir பாணி திரில்லராக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது.
அகிலன், தீய செயல்களில் ஈடுபடும் ஒரு கப்பல் கிரேன் ஆபரேட்டர், இந்தியப் பெருங்கடலின் ஆதிக்கமிக்கவனாக மாற வேண்டுமென்ற முனைப்பில், கடல் சம்பந்தமான அண்டர்வேர்ல்ட் உலகத்தினை கட்டிக் காக்க முயல்கிறான், துறைமுகத்தில் இருப்பதன் மூலம், பரந்தாமன் (ஹரீஷ் பேரடி) என்ற ஒரு முதலாளிக்காக அகிலன் போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கடத்துகிறான். சிறப்பு அதிகாரி கோகுல் மேத்தாவை (சிராக் ஜானி) தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி, சந்தர்ப்பம் கிடைக்கும்போது கடுமையான மற்றும் வெறித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு , ‘இந்தியப் பெருங்கடலின் ராஜா’ என்ற பட்டத்தை வெல்வதற்கு முழு வீச்சில் முயல்கிறான். ஆனால் அவனது ஆச்சரியமான பின்னணிக் கதை வெளிவரும்போது அது அவனது வில்லத்தனமான செயல்களுக்கு வேறொரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.
Screen Scene Media Entertainment தயாரித்துள்ள இப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், ஹரிஷ் உத்தமன், தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு, N கணேஷ் குமார் படத்தொகுப்பு, சாம் CS இசை என அகிலன் தொழில்நுட்ப ரீதியில் வலுவான ஆளுமைகளின் பங்களிப்பில் சிறப்பாக உருவாகியுள்ளது.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மனிஷா கல்ரா படம் குறித்து கூறுகையில், “ஜீ 5 தளத்தில் உள்ள தமிழ் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக சிறப்பான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற எங்களது நோக்கம், எங்களுக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. சிறப்பான படைப்புகள் பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு, ZEE5 யை அவர்களின் விருப்பமான தளமாக மாற்றவும் உதவியுள்ளது. கோலிவுட் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் பங்களிப்பில் நல்ல படைப்புகளை விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் தமிழில் அடுத்த சிறந்த படைப்பாக”அகிலன்” படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பது மகிழ்ச்சி. முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஆக்சன் கலந்த எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கும்.
இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் கூறுகையில்.., “அகிலன் படத்தில் பணிபுரிந்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எழுதி இயக்குவது முதல் இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவது மற்றும் வெளியிடுவது வரை இது மிக கடினமான வேலை, ஆனால் நான் அதன் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்து செய்தேன். நானும் ஜெயம் ரவியும் இணைந்து பணியாற்றிய மூன்றாவது படம் இது, நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களை முழுதாக மாற்றிக்கொண்டு அதற்கு தேவையான அனைத்தையும் அளித்த அற்புதமான நடிகர்கள் மற்றும் அயராத உழைப்பை வழங்கிய குழுவினரின் ஆதரவை நான் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றிக்குப் பிறகு, அகிலன் இப்போது ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. உலகம் முழுவதிலுமான பார்வையாளர்கள் இப்படத்தை நாங்கள் உருவாக்கும்போது மகிழ்ந்ததைப் போலவே, பார்த்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.
நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, “இப்படத்தில் துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக இருக்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அகிலன் திரைப்படத்தில் மாறுபட்ட ஒரு வில்லன் சாயல் இருக்க கூடிய வேடத்தில் நான் எனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தேன். வில்லன் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிக்காட்டுவதற்கான சரியான கதைக்களமாக இருந்தது அகிலன். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் N.கல்யாணகிருஷ்ணனுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அறிந்திராத ஒரு கதைக்களத்தில் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் நான் என்னை மாற்றிக்கொண்டு, அந்த கதைக்களத்திற்கு ஏற்ற ஒரு நடிப்பைக் கொடுக்க எனக்கு உறுதுணையாக இருந்தது இயக்குநர் தான். அவர் எனது நண்பர் என்பதால் நான் என்னை இலகுவாக இதில் இணைத்து கொண்டேன். இந்தப் படத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எனது இயக்குநர் என் மீது வைத்த நம்பிக்கை, என்னை பரிசோதனை முயற்சிகளை செய்ய தூண்டியது. இப்போது ZEE5 இல் அகிலன் ஸ்ட்ரீமிங் ஆகிறது. எங்கள் அன்பையும், உழைப்பையும் இந்தப் படம் மூலம் ரசிகர்கள் பார்த்து, ஒரு உணர்ச்சி பெருக்கான அனுபவத்தை பெறுவார்கள் என நம்புகிறேன்.
தற்போது ‘அகிலன்’ திரைப்படத்தை ZEE5 ஓடிடி தளத்தில் கண்டுகளியுங்கள்
ZEE5 பற்றிZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.
Tamil blockbuster film, Agilan – starring Jayam Ravi – is streaming now on ZEE5
‘Agilan’, starring Jayam Ravi released in theatres on 10th March and now after a successful run at the box office, the Tamil film just dropped on ZEE5 for its world digital premiere. Directed by N. Kalyanakrishnan, the movie stars Jayam in a dual role as a father and son and explores a neo-noir approach in the thriller genre.
Agilan, a cutthroat crane operator, will stop at nothing to reign supreme over the Indian Ocean’s seedy underworld. With his access to the harbour, Agilan smuggles drugs and other contraband in and out of the country for a kingpin named Paranthaman (Hareesh Peradi). When an opportunity arises, Agilan goes all out to win the title of the ‘King of the Indian Ocean’ by pulling off a high-stake mission despite having a stringent and maniacal special officer Gokul Mehta (Chirag Jani) on his tail. But as his twisted journey unfolds, his surprising backstory adds a whole new dimension to his villainous deeds.
Produced by Screen Scene Media Entertainment, the film also stars Priya Bhavani Shankar, Harish Uthaman, Tany Ravichandran, Chirag Jani, Hareesh Peradi, Tarun Arora, Madhusudhan Rao, among others. Agilan marks writer-director, Kalyanakrishnan’s third collaborative effort with Jayam Ravi. With Vivek Anand handling cinematography, N Ganesh Kumar in charge of editing and Sam CS responsible for music, Agilan makes for a compelling watch.
Manisha Kalra, Chief Business Officer, ZEE5 India said, “Our consumer-first approach in curating the Tamil content in zee5 has worked successfully for us as it has helped us entertain our audience and become their platform of choice. Kollywood fans love good content from their favourite stars and combining the two is our next world digital premiere in Tamil, Agilan. Starring superstar Jayam Ravi in a dual role, this masala film is sure to entertain with its action, drama and unexpected twists and turns”.
Director N. Kalyanakrishnan said, “Working on Agilan has been an exhilarating experience – from writing and directing to promoting and releasing this film, it has been a hands-on job, but I have enjoyed every bit of it. I am glad that I had the support of a terrific cast and crew who went along with my vision and gave it their all, including Jayam with whom this is my third collaboration. After its run at the box office, Agilan is now streaming on ZEE5. I hope that our global audience give it a chance and enjoy it as much as we have enjoyed making it”.
Actor Jayam Ravi said, “Agilan gave me an opportunity to play a crane-operator on a port, portray a grey role and work again with N. Kalyanakrishnan. So, all in all, it gave a chance to portray something new and unexplored while having the comfort of working with a friend cum director. I am happy that I took on this project and believed in the vision of my director as it pushed me to experiment. Now with the film streaming on ZEE5, I urge the viewers to watch our labour of love and get in on a high-adrenaline-ride”.
‘Agilan’ is streaming now only on ZEE5
About ZEE5:
ZEE5 is India’s youngest OTT platform and a Multilingual storyteller for millions of entertainment seekers. ZEE5 stems from the stable of ZEE Entertainment Enterprises Limited (ZEEL), a Global Content Powerhouse. An undisputed video streaming platform of choice for consumers; it offers an expansive and diverse library of content comprising over 3,500 films; 1,750 TV shows, 700 originals and 5 lakhs+ hours of on-demand content. The content offering spread across 12 languages (English, Hindi, Bengali, Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Oriya, Bhojpuri, Gujarati, and Punjabi) includes best of Originals, Indian and International Movies, TV Shows, Music, Kids shows, Ed-tech, Cine-plays, News, Live TV, and Health & Lifestyle. A strong deep-tech stack, stemming from its partnerships with global tech disruptors, has enabled ZEE5 to offer a seamless and hyper-personalised content viewing experience in 12 navigational languages across multiple devices, ecosystems, and operating systems.