Sunday, October 13
Shadow

தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணி

விரைவில் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது. இந்த அணியில் தலைவர் பதவிக்கு இராமநாராயணன் முரளி (எ) N.இராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் KJR (ராஜேஷ்), துணைத் தலைவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மைக்கேல் ராயப்பன், பொருளாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் பதவிக்கு போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

இந்த அணி வெற்றி பெற்றால் திரை அரங்கை வரைமுறைப்படுத்துவோம். சிறுபடங்கள் தடையின்றி வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்போம் என்று தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

மேலும் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.