தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தலை ஜூன் 30ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்கனவே நடிகர் விஷால் தலைவராக இருந்தார். இந்த நிலையில் அதற்கான பதவிக்காலம் முடிந்த உடனே தமிழக அரசு அதற்கான சிறப்பு அதிகாரியை நியமித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் இதில் மற்றொரு வழக்காக சங்கத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை பொறுத்தவரையில், உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும், மேலும் தேர்தலை நடத்தி முடித்து ஜூலை 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
இதனால் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் தயாரிப்பாளர் சங்கத்தின் உறப்பினர்களிடையே பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் 4 அணிகள் மோத இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முதல் அணியாக பிரபல தயாரிப்பாளரான ‘அம்மா கிரியேஷன்’ டி.சிவா தலைமையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்கிற பெயரில் ஒரு அணி உருவாகியிருக்கிறது.
இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு டி .சிவா போட்டியிடுகிறார்.
செயலாளர்கள் பதவிக்கு தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பனும், JSK சதிஷ் குமாரும் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.முரளிதரன் போட்டியிடுகிறார்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்கு தயாரிப்பாளர் G.தனஞ்செயன், ஆர்.கே.சுரேசும் போட்டியிடுகின்றனர்.
20 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
திரு. K. ராஜன்
திரு. ராதாரவி
திரு. K.S. ஸ்ரீனிவாசன்
திரு. சித்ரா லக்ஷ்மணன்
திரு. H. முரளி
திரு. SS. துரைராஜ்
திரு. K. விஜயகுமார்
திரு. RV. உதயகுமார்
திரு. மனோஜ் குமார்
திரு. S. நந்தகோபால்
திரு. மனோபாலா
திரு. பாபு கணேஷ்
திரு. பஞ்சு சுப்பு
திரு. M.S. முருகராஜ்
திரு. வினோத் குமார்
திரு. ரங்கநாதன்
திரு. பஞ்ச் பரத்
திரு. மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து போட்டியிடுகின்றனர்
திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை பாதுகாப்பாகத் தயாரிக்கவும், திரைப்படங்களை தயாரிக்காத தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழ உழைப்பதே எங்களது அணியின் நோக்கம் என்று இந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.