திருப்பூர் அவினாசி நகரைச் சேர்ந்த தம்பதியர் ரவிக்குமார் – ஜோதிமணி,
இவர்களுடைய மகன் உபநிசாந்த் என்பவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்திருக்கறிர்.
அதில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசையும் பெற்றிருக்கிறான்.
தற்போது அவன் பெற்ற தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளான்.
இது குறித்து அவனது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன் உபநிசாந்த்.
எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பான்.
ஏதாச்சும் சாதனை செய் உன்ன கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன்.
அவரைப் பார்க்கப் போக காசு வேணும்ல என சொல்லிட்டு நீச்சல் போட்டியில கிடைச்ச பணத்தை பத்திரமா வச்சிருந்தான்.
அந்த பணத்தை தான் தற்போது முதலமைச்சர் நிதியாக கொடுத்திருக்கிறான் என்றார் அவனது தந்தை.