லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் வெளியானது தி வாரியர்.
இந்த படத்தில் கீர்த்தி செட்டி, ஆதி, நதியா, ரெடின் கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
டாக்டர் ராம் தன் அம்மா நதியாவுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். ஒரு கட்டத்தில் வில்லன் ஆதியின் அடியாள்கள் ஒரு நபரை கொல்ல அவன் உயிரை காப்பாற்றுகிறார் டாக்டர் ராம். இதனால் இருவருக்கும் மோதல் வெடிக்கிறது. போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை. டாக்டர் ராமுவை அடித்து ஊரை விட்டு விரட்டுகிறார் ஆதி. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே மதுரைக்கு போலீசாக வருகிறார் ராம். தான் டாக்டராக இருந்தபோது தன்னால் செய்ய முடியாததை ஒரு போலீசாக செய்து காட்டுகிறார் ஆதி. அதன் பின்னே என்ன ஆனது என்பது மீதி கதை.
ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருக்கிறார் ராம்.. ஹீரோயின் கீர்த்தி ரொமான்டிக்கில் தெறிக்கவிட்டு உள்ளார். தன் அழகான க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் நம்மை கட்டி போடுகிறார். மிரட்டல் வில்லனாக அசத்தியிருக்கிறார் ஆதி. இனி தமிழில் இவருக்கு அதிக வில்லன் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியின் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களுக்கு ஸ்வீட்.
காதலர்களை கவரும் சில வசனங்களை வைத்துள்ளார். இரண்டு பைக்ல வேற வேற காபி ஷாப்புக்கு போக போறோமா.??நதியாவிடம் கீர்த்தி.. ஆன்ட்டி இவங்க உங்க சிஸ்டரா.? என்று கேட்கும் போது இந்த மாதிரி நிறைய பிட்டு பார்த்தாச்சு.. என்கிறார்.
குறிப்பாக நாயகி கீர்த்தி ஷெட்டி, நாயகன் ராமை பார்த்து, “நீ கூட தலையை கலைத்துவிட்டு சட்டை பட்டனை கழற்றி விட்டால் நீ கூட ஹீரோ மெட்டீரியல் தான் என்பதும், அந்தப் பக்கம் ஸ்பீடு பிரேக் இருக்கு.. இந்த பக்கமாக போலாம் என்பதும் ரொமான்ஸின் உச்சம்.
இதுபோல சின்ன சின்ன விஷயங்களை சரியாக வைத்துள்ளார் டைரக்டர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம்.. “விசில் சாங் சூப்பர் என்றால் புல்லட் சாங் சூப்பரோ சூப்பர்.. அந்த பாடலுக்கு ஆடாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் சிம்பு குரலில் வேற லெவல் சாங்.
படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைத்துள்ளது..
இயக்குநர் லிங்குசாமி பல வெற்றி படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார். அந்த வரிசையில் காதல், ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என அனைவரும் ரசிக்கும்படி ‘வாரியர்’ வெற்றிப்படமாக கொடுத்துள்ளார். அதற்காக அவரை பாராட்டலாம்.