Tuesday, July 27
Shadow

வீக் எண்ட்.. ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் வெளியிட்ட ‘ரேணிகுண்டா’ நிஷாந்த் மற்றும் நண்பர்கள்

பாப் ஆல்பம் வீடியோ உருவாக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. வீக் எண்ட் மூலம் அதை நிறைவேற்றியுள்ளோம்.
எல்லா பாப் ஆல்பங்களிலும் வெஸ்டர்ன் ஸ்டைல் உருவாக்கத்தின் தாக்கம் தான் இருக்கும். ஆனால், நாங்கள் ஆசிய ஸ்டைல் மேக்கிங் தாக்கத்தோடு ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் உருவாக்கியுள்ளோம்.

என்னுடன் இந்த ஆல்பத்தில் ஆண்டனி வாங், ரேமண்ட் இணைந்து நடனமாடியுள்ளனர். பாடல் வரிகளை கு.கார்த்தி இயற்றியுள்ளார். V2 விஜய் விக்கி இசையமைத்துள்ளார்.கவுசிக் கிரிஷ் பாடியுள்ளார். ஆண்டனி வாங் நடனத்தை வடிவமைத்துள்ளார். நான் தான் ஆல்பத்தை இயக்கியுள்ளேன். பினு ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஷ்வந்த் தயாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலரிஸ்டாக சுரேஷ் ரவி பணியாற்றியுள்ளார். எடிட்டிங் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் தீபக் துவாரக்நாத். இந்த ஆல்பம் உருவாக்கத்தில் இணைந்துள்ள நாங்கள் அனைவருமே நண்பர்கள். நட்பு என்ற ஒரு புள்ளி தான் எங்களை இணைத்து இன்று புதிய பரிமாணத்துக்குக் கொண்டுவந்துள்ளது. நாங்கள் இனியும் இதுபோன்ற ஆல்பங்களில் இணைந்திருக்க முடிவு செய்திருக்கிறோம்.

எங்களின் WeekEnd வீக் எண்ட் ஆல்பம் நிச்சயமாக கொரோனா ஊரடங்கால் தவித்துவருவோருக்கு ஒரு ஸ்டரெஸ் பஸ்டராக இருக்கும்.

இவ்வாறு நிஷாந்த் கூறினார்.

இந்த பாடல் நேற்று சோனி மியூசிக்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *