Saturday, October 23
Shadow

சாதனை சங்கமம் மூலமாக நேயர்களுக்கு ஆச்சர்யமூட்டும் பல கதைத் திருப்பங்களை பரிசாக அளித்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, ஜூலை 12 முதல் தனது பிரபல நிகழ்ச்சிகளை புதிய நேரங்களில் ஒளிப்பரப்புகிறது

ஜீ தமிழ் சீரியல்களின் நேயர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்களுடன் ஒரு ஆழமான பந்தத்தை உருவாக்கிக்கொண்டுள்ளது மட்டுமல்லாமல், அந்த கதாப்பாத்திரங்களின் பயணத்தில் ஐக்கியமாகி விட்டனர் என்று தான் கூறவேண்டும். இந்நிகழ்ச்சிகளின் விறுவிறுப்பான கதைகளும், அற்புதமான நடிப்பும் ஜீ தமிழ் தொலைக்காட்சியை தமிழ் பொழுதுபோக்கு சேனல்களுள் முதன்மையான ஒன்றாக மாற்றியுள்ளது. 2021 வேகமெடுக்கும் இந்த நேரத்தில், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் பல்வேறு ஆச்சரியங்களை வழங்கவுள்ளது, அதிலும் குறிப்பாக சமீபத்திய டிரென்டடிங்காக உள்ள பல்வேறு தொடர்களின் ‘மகா சங்கமம்’ நேயர்களின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று பிரபலமானதாக உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது நேயர்களுக்கு ஒரு எதிர்பாராத பரிசினை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஜூலை 12 முதல் துவங்கி இரண்டு வாரங்களுக்கு ஒளிபரப்பாகவுள்ள சாதனை சங்கமத்தில், அத்தொலைக்காட்சியின் மிகப்பிரபலமான இரண்டு நெடுந்தொடர்களின் மக்களின் மனம் கவர்ந்த கதாப்பாத்திரங்கள் இணைந்து திரையில் தோன்றி, நேயர்களுக்கு ஒரு மனதைவிட்டு நீங்காத அனுபவத்தை வழங்க உள்ளனர். செம்பருத்தி மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ஆகிய இரு தொடர்களின் ஒரு மணிநேர சாதனை சங்கமம், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், ஞாயிறுகளில் இரவு 9:30 முதல் 10:30 வரையிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த சாதனை சங்கமத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து சென்னைக்கு வரும் சேர்மன் ராசாத்தியும், இனியனும் அகிலாண்டேஸ்வரியை சந்திக்கவுள்ளனர். ராசாத்தி எப்படி தனது நிர்வாகத் திறமையை காண்பித்து அகிலாண்டேஸ்வரியின் மனதைக் கவர்கிறாள்; அகிலாண்டேஸ்வரியின் உயிருக்கு உள்ள ஆபத்தை எப்படி தவிடுபொடியாக்குகிறாள் என்பதே சுவாரஸ்யமான கதைக்களமாகும்.

செம்பருத்தி தொடரில் ஷபானா ,வி.ஜே அக்னி மற்றும் பிரியா ராமன் ஆகியோரும் ,ஒரு ஊர்ல ராஜகுமாரி தொடரில் அஸ்வினி ராதாகிருஷ்ணன் மற்றும் புவிஅரசு முத்துசாமி ஆகியோர் நடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *