“செகப்பு சேலை”
தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் “செகப்பு சேலை”
ஒரு குறிப்பிட்ட எல்லைப்பகுதியில் சிவப்புச்சேலையை கட்டிக்கொண்டு வரும் கதாநாயகி மர்மமான முறையில் தாக்குதலுக்கு ஆளாக நேர்கிறது,அந்தத் தாக்குதலை நடத்துவது மனிதர்களா?அல்லது அமானுஷ்ய ஆவிகளா? எதற்காக தாக்கப்படுகிறார் என்ற கருவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
ஸ்ரீ சுமன் வெங்கடாத்ரி புரொடக்சன் நிறுவனம் சார்பில் ஸ்ரீ சுமன் கதை திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார்.
காருண்யா கதாநாயகியாகவும் உயிர் ஸ்ரீகாந்த்,ஐயப்பஷர்மா,சுமன்ஷெட்டி,ஆலி,ரகுபாபு,அஜய்,ஜீவா,பானுஸ்ரீ,கீதாசிங்,பேபி தேஜஸ்ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள ப்ரமோத் இசையமைக்கிறார், வசனம்–விஜயமூர்த்தி.
தயாரிப்பு நிர்வாகம்: விஜயகுமார்–விஜய் திவாகரன்.
பெங்களூரு, ஐதராபாத், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
PRO. V.M.ஆறுமுகம்.