Saturday, February 22
Shadow

‘2K லவ் ஸ்டோரி’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Jagaveer, Meenakshi Govindraj, Lathika Balamurugan, Bala Saravanan, Singampuli, Jayaprakash, Antony Baghyaraj, GP Muthu, Vinodhini

Directed By : Suseenthiran

Music By : D.Imman

Produced By : City Light Pictures – Vignesh Subramanian

இயக்குனர் சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு (2009) மெகா ஹிட் .நான் மகான் அல்ல (2010 )கமர்ஷியல் மசாலா .அழகர்சாமியின் குதிரை (2011) விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப்பெற்றாலும் , தேசி ய

விருதைப்பெற்றாலும் கமர்ஷியலாகப்போகவில்லை . சீயான் விக்ரம் நடித்திருந்தும் ராஜபாட்டை (2011) அட் டர் பிளாப் ,ஆதலால் காதல் செய்வீர் (2013) ஹிட் . பாண்டிய நாடு (2013) செம்ம ஹிட் ஜீவா (2014), பாயும் புலி (2015) ஓகே ரகம் . மாவீரன் கிட்டு (2016) குட் நெஞ்சில் துணிவிருந்தால் (2017) . ஜீனியஸ் (2018) ,கென்னடி கிளப் (2019) , சாம்பியன் (2019) ஈஸ்வரன் (2024) , வீர பாண்டிய புரேம் (2024) ஆறும் சுமார் ரகங்கள் . குற்றம் குற்றமே (2022) அருமையான க்ரைம் திரில்லர் . இப்போ வந்திருக்கும் 2K லவ் ஸ்டோரி எப்படி இருக்கு என பார்ப்போம்

விக்ரமன் இயக்கத்தில் வெளி வந்து மெகா ஹிட் ஆன புது வசந்தம் (1990) , ஏ வி எம் மின் பிரியமான தோழி (2003) ஆகிய இரு படங்களும் ஆன் , பெண் நட்பை பெருமைப்படுத்தும் படங்கள் . அதே பாணியில் தான் இதன் திரைக்கதையும் அமைந்திருக்கிறது

சுசிணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படம் ஒரு லவ் ஸ்டோரியாக இருந்தாலும் அதில் வரும் 5 நண்பர்கள் ( இரு பெண்கள் +3 ஆண்கள் ) கடைசி வரை நண்பர்களாகவே இருப்பார்கள் . சிம்பு வின் வல்லவன் ல கூட சிம்பு + சந்தியா கடைசி வரை நண்பர்களாகவே இருப்பார்கள்

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் , நாயகி இருவரும் சின்ன வயதில் இருந்தே க்ளாஸ் மேட் ஸ் , பேமிலி பிரண்ட்ஸ் . இருவருக்கு இடையில் நட் பு மட்டுமே என்பதில் அவர்கள் இருவரும் தெளிவாக இருக்கிறார்கள் .ஆனால் அவர்களது சில நண்பர்களும் உறவினர்களும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள் .

நாயகனை வேறு ஒரு பெண் லவ் பண்ண அதற்கு நாயகி ஓகே சொல்கிறாள் . ஆனால் அவர்கள் இருவரும் நெருங்கிப்பழகும்போது நாயகிக்கு பொஸசிவ்னெஸ் வந்து விடுகிறது . தன நண்பனைப்பங்கு போட ஒருத்தி வந்து விடடாள் என்ற நட்பின் அடிப்படையிலான பொஸசிவ்னெஸ் தான் .காதல் எல்லாம் இல்லை . முதல் பாதிக்கதை முழுக்க காதல், காமெடி என நகர்கிறது

நாயகனின் காதலி ஒரு விபத்தில் இறந்து விடுகிறாள் . இதற்குப்பின் நாயகன் , நாயகி இருவர் குடும்பத்தி லும் ஒரு முடிவு எடுக்கிறார்கள் . நாயகனுக்குப்பெண்பார்க்கும் இடத்தில் அந்தப்பெண்ணின் அண்ணனை நாயகி திருமணம் செய்து கொள்ள வேண்டும் . பெண் கொடுத்துப்பெண் எடுப்பது . இப்படிச்செய்தால் அனைவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழலாம் . அவர்கள் நினைத்தபடி ஒரு சம்பந்தம் அமைகிறது

ஆனால் அந்தக்கல்யாணத்தை நிறுத்த இரு வில்லன்கள் முளைக்கிறார்கள் .காமெடி கலாட்டாக்களுக்கு மத்தியில் இருவரும் என்ன செய்தார்கள் ? என்பது மீகி திரைக்கதை

நாயகன் ஆக புதுமுகம் ஜெகவீர் நடித்திருக்கிறார் . முக சாயலில் யுவன் சங்கர் ராஜா போல் இருக்கிறார் , தோற்றம் , உடல் மொழி ஓகே ரகம் , ஆனால் நடிப்பு ? இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்

நாயகி ஆக , நாயகனின் தோழி ஆக மீனாடசி கோவிந்த ராஜன் நடித்திருக்கிறார் .இவர் ஜெனிலியா டிசோசா சாயலில் இருக்கிறார் . நடிப்பு ஓகே ரகம்

முதல் பாதியில் நாயகனின் காதலி ஆக வருபவர் பெயர் தெரியவில்லை .ஆனால் அழகாக , போஷாக்காக , கொழுக் மொழுக் என இருக்கிறார் . அநியாயமாக அவரை சாகடித்து விட்டார்கள்

பால சரவணன் நாயகனின் நண்பன் ஆக வருபவர் பெரிய அளவில் காமெடி எல்லாம் செய்யவில்லை , ஆனால் பேசிக்கொண்டே இருக்கிறார்

பின் பாதியில் திருமணத்தை நிறுத்த முனையும் காமெடி வில்லன் ஆக சிங்கம் புலி கலகலப்பாகக்கலக்கி இருக்கிறார் . பொதுவாக வில்லன் எனில் கோபம் வரணும், ஆனால் நமக்கு சிரிப்பு வருகிறது

ஜெயப்பிரகாஷ் , விநோதினி , நிவேதிதா ராஜப்பன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்

டி இமானின் இசையில் நான்கு பாடல்கள் .2 ஹிட் ஆகி விடும் .பின்னணி இசை சுமார் ரகம் தான் தியாகுவின் எடிட்டிங்கில் 127 நிமிடங்கள்படம் ஓடுகிறது .கடைசி 40 நிமிடங்கள் இழுவை .வி எஸ் ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் நாயகனின் தோழி , காதலி , மனைவி என மூவரையம் க்ளோஷப்பில் அழகாகக்காட்டி இருக்கிறார்

கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் சுசீந்திரன் .அவரது பழைய திறமைகள் பெரிதாக வெளிப் படவில்லை .