Saturday, February 22
Shadow

‘ராமம் ராகவம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Samuthirakani, Dhanraj Koranani, Pramothini, Moksha, Harish Uthaman, Sunil, Sathya, Srinivas Reddy, Prithviraj

Directed By : Dhanraj Koranani

Music By : Arun Siluveru

Produced By : Slate Pencil Stories – Prithvi Polavarapu

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக நிகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ராமம் ராகவம். இந்த படத்தில் தெலுங்கு மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகர் தன்ராஜ் நடித்திருக்கிறார். இவரே இந்த படத்தை இயக்கியும் இருக்கிறார். இதுதான் தமிழில் இவர் இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இந்த படத்தில் சத்யா, பிரமோதினி, சுனில், ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் சமுத்திரகனி ஒரு நேர்மையான பதிவு அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் எந்த லஞ்சமும் வாங்காமல், யாருக்குமே அடிப்படியாமல், எந்தவித ஆசைக்கும் ஈடு கொடுக்காமல் நேர்மையான அதிகாரியாக இருக்கிறார். இவருடைய மகன் தான் தன்ராஜ். இவர் பொறுப்பில்லாமல் ஊதாரி தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். பொறுப்பான நேர்மையான அதிகாரிக்கு இப்படி ஒரு மகனா? என்று பலருமே கேட்கும் அளவிற்கு தன்ராஜ் இருக்கிறார்.

தன்ராஜ் சீக்கிரமாக பணம் சம்பாதிக்க நிறைய தவறான வழிகளை எல்லாம் செய்வார். ஆனால், ஒவ்வொரு முறையுமே தன்னுடைய தந்தையிடம் மாட்டிக்கொள்ளுவார். எவ்வளவோ சமுத்திரக்கனி திட்டினாலும் கொஞ்சம் கூட திருந்தாமல் அதே தப்பை தான் தன்ராஜ் செய்கிறார். இவர் நிறைய சூதாட்ட பந்தைகள் மூலம் பணத்தை இழந்து இருக்கிறார். கடைசியில் தன்னுடைய தந்தையின் கையெழுத்தையே போலியாக போட்டு மாட்டியும் கொள்கிறார்.

இதனால் சமுத்திரகனியே தன் மகனை போலீசில் பிடித்து கொடுக்கிறார். இருந்தும் அவரிடம் இருந்து மாற்றம் வரவில்லை. இன்னொரு பக்கம் சிலர் சமுத்திரக்கனியை கொல்ல நினைக்கிறார்கள். சமுத்திரகனியை எதற்காக கொல்ல நினைக்கிறார்கள்? தன் தந்தைக்காக தன்ராஜ் மனம் மாறினாரா? தன் தந்தையை காப்பாற்றினாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.
ஒரு தந்தையாகவும், நேர்மையான அதிகாரியாகவும் சமுத்திரக்கனி தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவரை தொடர்ந்து மகனாக தன்ராஜ் நடித்திருக்கிறார். பொறுப்பில்லாத. தவறு மேல் தவறு செய்யும் ஊதாரி தனமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் என்று சொல்லலாம். தந்தை மகனுக்கு இடையே ஆன உறவை மையமாக வைத்து தான் என் இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி கண்ணீர் வரவைத்து இருக்கிறது. கிளைமாக்ஸ் எல்லாம் நன்றாக இருக்கிறது.

முதல் பாதியை கொஞ்சம் அழுத்தமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்திருக்கலாம். படத்தில் சில காமெடி காட்சிகள் நன்றாக இருந்தாலும், நிறைய காட்சிகள் பெரிதாக பார்வையாளர்கள் மத்தியில் கவரவில்லை. லவ் டிராக் செட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தினுடைய பின்னணி இசை பழைய படங்களை தான் நினைவுபடுத்தி இருக்கிறது. படம் முழுக்க முழுக்க எமோஷனல் டிராமாவாகத்தான் இருக்கிறது. கதைகளம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றப்படி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் எதுவுமே இல்லை. தந்தை மகன் உறவுக்காக இந்த படத்தை போய் பார்க்கலாம்.