‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Pavish Narayan, Anikha Surendran, Mathew Thomas, Priya P Varrier, Venkatesh Menon, Ramya Ranganathan, Siddhartha Shankar, Rabiya Khatoon, R Sarath Kumar, Saranya Ponvannan, ‘Aadukalam’ Naren, Uday Mahesh, Sridevi
Directed By : Dhanush
Music By : GV Prakash Kumar
Produced By : Wunderbar Films Pvt Ltd – Kasthoori Raja & Vijayalakshmi Kasthoori Raja
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் இயக்கத்தில் பா. பாண்டி, ராயன் போன்ற படங்களை எல்லாம் வெளியாகி இருந்தது. தற்போது தனுஷின் அடுத்த படைப்பாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் உருவாகி இருக்கிறது. இளைஞர்களை மையமாக வைத்து இந்த படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன்,பிரியா வாரியார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தின் ஆரம்பத்திலேயே ஹீரோ பவிஸ் காதல் தோல்வி அடைகிறார். அதற்குப்பின் இவர் பிரியா வாரியரிடம் தன்னுடைய முதல் காதல் தோல்வி பற்றியும், காதலி குறித்தும் எல்லா விஷயத்தையும் சொல்கிறார். அப்போது அவர், பவிஷ் செஃப் தொழிலை செய்து கொண்டிருக்கிறார். ரொம்ப பிடித்து தான் இந்த வேலையை இவர் செய்கிறார். அப்போதுதான் இவர் அனிகாவை சந்திக்கிறார். அதற்கு பின் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இருவரின் வீட்டிலுமே தங்கள் காதலை சொல்கிறார்கள்.
ஹீரோவின் வீட்டில் அவருடைய காதலுக்கு ஓகே சொல்லி விட்டார்கள். ஆனால், அனிகாவின் காதலுக்கு அவருடைய தந்தை சரத்குமார் முடியாது என்று சொல்கிறார். இருந்தாலுமே அனிகா தன்னுடைய காதலில் உறுதியாக இருக்கிறார். இதனால் சரத்குமார், உன்னுடைய காதலன் எப்படிப்பட்டவன் என்று பழகி பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தன்னுடைய மகளின் விருப்பத்திற்காக பவிசுடன் சரத்குமாரும் பழகி பார்க்கிறார். இருந்தாலும், பவிஷ் மீது அவர் வெறுப்பை மட்டும் தான் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது பவிஷுக்கு அனிகாவின் தந்தை சரத்குமாருக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கிறார். இதனால் அவருடைய ஆசை போலவே அவருடைய மகளின் வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஹீரோ பவிஸ், அனிகாவின் வாழ்க்கையை விட்டு விலகுகிறார். இதனால் பவிஷ்-அனிகா காதல் பிரேக்கப் ஆகிறது. அடுத்த ஆறு மாதத்திற்குள் அனிகாவிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு பவிஷ் போகிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? பவிஷ்- அனிகா சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
தனுஷ், இயக்குனராக ஒரு சிறப்பான கதைக்களத்தை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்லணும்.
ஆனால், அது எதுவும் படத்தை பாதிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. இந்த காலத்து இளைஞர்களைக் கவரும் வகையில் இயக்குனர் கதைக்களத்தை கொண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தில் புதுமுக ஹீரோ பவிஷ், தனுஷ் உடைய சகோதரியின் மகன். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
அவரை அடுத்து படத்தில் வரும் அனிகா,ப்ரியா வாரியரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து இயக்குனர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் அதை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய ஒன்றுதான். ஆனால், நகைச்சுவை காட்சிகள் தான் பெரிதாக ஓர்கவுட்டாகவில்லை.
மேலும், எமோஷனல் காட்சிகளில் நடிகர்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அறிமுக நடிகர்கள் என்பதால் பார்வையாளர்களை கவருவதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மற்ற படி படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை. வழக்கம் போல் பின்னணி இசையில் ஜிவி பிரகாஷ் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். சொல்லப்போனால், படத்திற்க்கு பக்கபலமே அவருடைய இசை தான். அதேபோல் அவருடைய கேமியாகவும், பிரியங்கா மோகன் நடனமும் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.