
Dream House Production No 1 Movie Pooja
Dream House நிறுவனம் தயாரிப்பில், மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம், இனிதே துவங்கியது !
Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.
நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கி...