சமகால மக்களின் கருத்துக்களையும் அரசியல் நிகழ்வுகளையும் நாட்டில் நடக்கும் சம்பவகளையும் மக்களிடம் விழிப்புணர்வு இருக்கிறதா! நேரடியாக மக்களின் கருத்தை கேட்டு மக்களின் குரலாகவே நகைச்சுவையுடன் கலந்து ஒலிக்கும் நிகழ்ச்சி ‘மைக் மாயாண்டி’ .
எதையுமே கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொன்னால் சுலபமாக கருத்துக்கள் மக்களை சென்று அடையும் என்பது பொதுவான கருத்து. நாட்டின் முக்கிய பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து கொடுக்க வருகிறது மைக் மாயாண்டி . இந்த நிகழ்ச்சியில் ஒரு சமூக பிரச்னையை நையாண்டி தனமாக சித்தரித்து அதில் அடங்கி இருக்கும் பிரச்சனையை நகைச்சுவையாக மக்களுக்கு சொல்கிறார்கள் .
வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கேசவ் பாண்டியன்.
.